திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச சபைக்குட்பட்ட கிண்ணியா சூரங்கால் பிரதான வீதியில் போக்குவரத்து செய்ய முடியாத நிலையிலுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
கிண்ணியா கண்டல் காட்டிலிருந்து டிப்பல் வாகனத்தில் மணல் ஏற்றிச் செல்கின்ற போது சூரங்காலிருந்து கற்குழிக்கு செல்லும் பிரதான வீதி சேரும் சகதியும் நிறைந்த வீதியாக மாறுகின்றது.
இதனால் அரை கிலோ மீற்றருக்கு மேலாக சேர் நிறைந்ததாக இவ் பிரதான வீதி காணப்படுவதால் மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியில் செல்வோர் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்.
தற்போது மழை காலமாகையால் வீதியில் போக்குவரத்துக்கள் மேற்கொள்ள முடியாத நிலையிலுள்ளதாக வாகன சாரதிகள் தெரிவிக்கின்றனர்.
குறித்த வீதியை கிண்ணியா பிரதேச சபை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.
0 comments :
Post a Comment