குறித்த சந்திப்பு தொடர்பில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் திகாமடுள்ள தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் அவர்களை இம்போட்மிரர் செய்திப்பிரிவு தொடர்பு கொண்டு கேட்டபோது:
முஸ்லீம்களின் ஜனாஸாக்களை எரித்தலை நாங்கள் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை அதனை எங்கள் மார்க்கமும் தடை செய்துள்ளது.
ஆனால் நடந்து கொண்டிருக்கும் இந்த கொடுமையான நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்று பலரும் தங்களால் முடிந்தளவு முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் இதுவரை எந்த சாதகமும் கிடைக்க வில்லை. அதனைத் தொடர்ந்தே இன்று பிரதமரைச் சந்திக்கும் முடிவுக்கு வந்து இன்று பேச்சுவார்த்தை இடம்பெற்றிருக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பல தகவல்கள் பறிமாறப்பட்டிருக்கின்றன எனவே இச்சந்திப்பு வெற்றிபெற வேண்டும் என்று பிராத்திப்போம் இதன் முழு விபரம் கீழே உள்ள காணொளியில் கேட்கலாம்.
குறித்த சந்திப்பில் அமைச்சர்களான அலி சப்ரி, பவித்ரா வன்னிஆராச்சி, ரோஹித அபேகுணவர்தன, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ் ஆகிய முஸ்லீம் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்களும், சுகாதார அமைச்சின் முக்கிய அதிகாரிகளும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment