நூருள் ஹுதா உமர்-
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிங்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கினால் திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக 120 அடி வரையும் நிலக்கீழ் நீர் அற்ற அதிக பார்களையுடைய தோப்பூர், மூதூர், கிண்ணியா போன்ற உலர்ப்பிரதேசங்களில் காணிகளை வாங்கி நல்லடக்கம் செய்வதற்காக பயன்படுத்த முடியுமென்றும் அரசு மனிதாபிமான முறையில் இந்த கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்று தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் டாக்டர் வை.எஸ்.எம். ஸியா அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் தனது அறிவிப்பில்
உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்க இலங்கையில் கொரோனா வைரஸுடன் இனவாத விஷக்கிருமிகளும் பரவியுள்ளது என மக்கள் அச்சம் வெளியிடுகின்றனர். கொரோனா தொற்றின் காரணமாக மரணிக்கின்ற ஜனாஸாக்களை அடக்குவதற்கான முஸ்தீபுகள் நடைபெறும் இவ்வேளையில்
அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இது அமையும் என்றும் தெரிவித்தார்,
உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிக்கை மற்றும் உலக நாடுகளினதும் இந்த நாட்டு மக்களினதும் வேண்டுகோள்களை ஏற்று இலங்கை அரசு தீர்வை முன்வைக்க முன்வரவேண்டும்
இந்த நாட்டில் எல்லா விடயங்களிலும் மக்கள் சார்ந்து உள்ள இந்த அரசு ஜனாஸா விடயத்தில் மாத்திரம் இப்படி செயற்படுவது வேதனையளிக்கின்றது. இந்த அரசின் பங்காளியாக தேசிய காங்கிரஸ் பல விடயங்களில் உங்களுக்கு பக்கபலமாக இருந்திருக்கிறோம். மட்டுமின்றி இந்த அரசை அமைக்க முழுமையாக தியாகித்து வெற்றிகண்டுள்ளோம். இந்த அரசின் பங்காளியாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிங்களை மாற்றிய எங்களின் முகத்தில் இப்போது கவலை தேங்கி நிற்கிறது. உங்களுக்கு ஆதரவு வழங்கிய முஸ்லிங்களின் மனங்கள் இன்று கவலையில் இருக்கின்றது.
இந்த நாட்டின் சுபீட்சமிகு தலைமைகளான ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் இவ்விடத்தில் சரியாக சிந்தித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.- என்றார்.
0 comments :
Post a Comment