வடக்கு முஸ்லிம் எழுத்து மூன்று தசாப்தம்

ரண்டாம் அமர்வு உரையமர்வாக ணுழுழுஆ வழியாக 20.12.2020 அன்று மாலை4.00 வெள்ளாப்புவெளியின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ் அவர்கள் முதன்மை உரையாற்றினார்.ஆழமான உணர்வைப ;பிழிகிற நினைவுகளை மீளெழுப்புகிற உரையது.வடக்கு முஸ்ஸிம் எழுத்துக்கள் மேமெழாமைக்கு பொதுவெளியில் ஆழமாகப்பேசப்படாமைக்கு உள்ள அரசியல் குறித்தும் பேசினார்.ஆவணமாக்கல் .

புகைப்பட ஓவியககலைகளை வளர்த்தல் விடுபடல்களை நிரப்புதல் என தொடர்கதையாடலுக்கான தொடக்கப்புள்ளியை இட்டார்.

எஸ்.கருணாகரன ;முஸ்லிம்களின் வெளியேற்றம் குறித்து வெட்கப்படுவது மட்டுமல்ல மீள் குடியேறிய சூழலில் கூட அவர்களை அரவணைக்க திறந்த மனதுடன் பேசும் மனோபாவம் தமிழ்த்தரப்பிடம் இருக்கவில்லை என்பதான அரசியல் சூழல் குறித்தும் வடக்கு முஸ்லிம் பிரதிகள் பற்றியும் உரை வழங்கினார்.
ஏ.பி.எம்.இத்ரீஸ் வடக்கு முஸ்லிம் வரலாற்றெழுத்தியல் சார்ந்து கலாநிதி
எஸ் எச் ஹஸ்புல்லாவின் பிரதிகளை முன்னிறுத்திப பேசினார் .நவவரலாற்றுழுதுகை .நிகழ்த்துகலை குறித்து அனுபவ வெளிப்பாட்டுடன் கதையாடினார்.

சி.ரமேஷ் இலங்கை முஸ்லிம்களின் கலை இலக்கியப்பங்களிப்பு குறித்து ஆய்வு ரீதியான வாசிப்பை முன்வைத்தார்.

மேமன்கவி பின்காலனியப் பின்ணியில் இலங்கையின் இடப்பெயர்வு மலையகம் முதல் வடக்கு முஸ்லிம் வரையாக நிகழ்ந்தமை குறித்தும் இதனூடு வடக்கு முஸ்லிம் கவிதை குறித்தும் கருதுரைத்தார்.
ஆழமான கருத்துக்களின் சங்கமமாக கேள்விகளை எழுப்பி அதற்கான விடைகளுக்காகப பயணப்பட வேண்டிய தொடருறு சூழலை உருவாக்குதல் குறித்து அரங்கிலுள்ளோர் அபிப்பிராயங்கள் அமைந்தன.

தொடக்கவுரையின்போது வடக்கு முஸ்லிம்கள் வடிவங்களைத்தேடும் வாழ்வில் தேடப்பட்ட வடிவங்கள் பங்காற்றிய களங்கள் எழுதிய படைப்பாளிள் வெளிவந்த திரட்டுகள் பிரதிகள் குறித்த அறிமுகம் முல்லை முஸ்ரிபாவால் முன்வைக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :