கொவிட்19 காரணமாக உயிரிழக்கும் ஜனாசாக்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக நாடளாவியரீதியில் கபன் வெள்ளை துணியிலான துண்டை கட்டி தங்களது கண்டனங்களை தெரிவித்து வரும் அதே நேரம் முள்ளிப்பொத்தானை அல்ஹிஜ்ரா ஜூம்ஆ பள்ளிவாயல் வளாகத்தில் வெள்ளை நிற துணியினை கட்டி கண்டணங்களை வெளியிட்டனர்.
தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தலைமையில் இன்று (14) ளுஹர் தொழுகையின் பின் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் பலர் வெள்ளை நிற துணியிலான துண்டுகளை கட்டி ஜனாசா எரிப்புக்கு எதிரான கண்டனங்களை வெளியிட்டதுடன் அண்மையில் பிறந்து 20 நாட்களான குழந்தையின் உயிரழப்பு காரணமாக கொவிட்19 என்றவாறு தகனம் செய்ததையும் வன்மையான கண்டனத்தை வெளியிட்டார்கள்.
இதன் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன்
ஜனாசா எரிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது அப்பாவி முஸ்லிம்களின் ஜனாசாக்களை கொவிட்19 இறப்பு என்ற போர்வையில் தகனம் செய்வதை ஏற்க முடியாது இதனை நிறுத்தி ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறும் ஜனாதிபதியினை வேண்டுவதாகவும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment