எங்கள் ஜனாசாக்களை அடக்கம் செய்ய அனுமதியுங்கள்- பொரல்ல கனத்தைக்கு முன்னால் அலிஸாஹிர் மெளலானா போராட்டம்.!


ஏறாவூர் நஸீர்-

COVID-19 வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழக்கும் முஸ்லீம்களது ஜனாஷாக்கள் எரிக்கப்படுவதனை எதிர்த்து கொழும்பு பொரல்ல கனத்தைக்கு முன்னால் அமைதிப் போராட்டத்தினை ஆரம்பித்தார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஷாஹிர் மௌலானா..

எரிக்கப்பட்ட வெறும் 20 நாட்களே ஆன பாலகன் ஷாயிக் மற்றும் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த 100 பேரிற்காகவும் பல உடல்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்ட பொரல்லை மயானக் கதவிலே வெள்ளை துணிகளை கட்டி வித்தியாசமான முறையில் தனது எதிர்ப்பினை வெளிக்காட்டுகிறார்.

முஸ்லீம் சமூகத்தின் உடல்கள் (ஜனாசாக்கள்) எரிக்கப்படக்கூடாதென்று அனைத்து சமூக மட்ட தலைமைகளும் தங்கள் ஆதங்கங்ளை வெளிப்படுத்திவரும் நிலையில் அலிஷாஹிர் மௌலானா தன்னால் முடிந்ததை செய்து கொண்டிருக்கிறார்.

அலிஸாஹீர் மெளலானா பாராளுமன்றம் சென்றிருந்தால் மக்களுக்காக பேசியிருப்பார் போராடியிருப்பார் இப்படியான அநியாயக்காறர்களுக்கு துணைபோயிருக்க மாட்டார். ஆனால் மக்கள் இனியும் இப்படியான தவறுகள் மூலம் வியாபாரிகளை பாராளுமன்றம் அனுப்பாது சரியானவர்களை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையினையும் மக்கள் விடுகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :