திருகோணமலை கிண்ணியா சட்டத்தரணி ஏ.எச்.எம்.றபீக்(பொட்டு றபீக்) முப்பதாவது நினைவு தினம்

எம்.ஏ.முகமட்-

ண்பதுகளில் கிண்ணியாவில் பிரபலமான பெயர் பெரும்பாலும் ஊருக்குள்ளும் ஊருக்கு வெளியௌயும் அந்த பெயருக்கு அலாதியான பெயர் இருந்தது."நிலத்தில் கிடந்தமை கால்காட்டும்"என்ற வல்வுவரின் கூட்டுக்கொப்ப வங்குரோத்துக்காரர்கள்

தளிரிலேயே முதுகெழும்பற்ற கோழைகளால் கிள்ளப் பட்ட தனது சமகால சமூகத்திக்கான தலைமைத்துவத்தினை தரூவதற்காக உருவாகிக் கொணடிருந்த ஒரு அற்புதமான ஆளுமையும் சிந்தனையாளருமான மர்ஹும் சட்டத்தரணி ஏ.எச்.எம்.றபீக் (பொட்டு றபீக்) இன்று நம்மிடையே காணமலாக்கப் பட்டு தற்போது முப்பது வருடங்களாகி விட்டன.அன்னாரது நினைவு தினம் டிசம்பர் மாதமாகும்.

இவர் இம் மாதமொன்றில் தான் காணாமலாக்கப் பட்டிருந்தார்.அவருக்கு என்ன ஆனது என்பது பற்றி இன்று வரை யாரும் அறிந்திருக்கவில்லை.இவரை காணாமற்போனோர் பட்டியலிலேயே நாம் வைத்திருக்கின்றோம் என்பதே காலத்துயர்.

இவர் அப்துல் கமீது மற்றும் சதக்கும்மா தம்பதியரின் புதல்வனாக 1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் திகதி குட்டிக்கராச்சி கிண்ணியாவில் பிறந்தார்.இவரின் தந்தை அப்துல்ஹமீது ஒரு மீனவராக இருந்தும் அத்தொழிலை தனது பிள்ளைகளும் செய்து கஸ்டப் படக் கூடாது என்பதற்காக இரவு பகலாக உவர் கடலில் இறங்கி பிள்ளைகளை கல்விக் கடலில் நீந்த வைத்து கரை சேர்த்தார். இதன் விளைவாக உருவானவரே ஆளுமையும்,திறனும்,பேச்சாற்றலும்,எழுத்தாற்றலும், மதி நுட்பமும்,மும்மொழியாற்றலும் மற்றும்வேகமும்,விவேகமும் கொண்டவராக திகழ்ந்தார்.

இவர் ஆரம்பக்கல்வியை 1966ஆம் கிண்ணியா குட்டிக்கராச்சி பாடசாலையிலும் ,இடை நிலைக் கல்வியை தி/கிண்ணியா மத்தியகல்லூரியில் கற்றதுடன் 1976ஆம் ஆண்டு NCG பரீட்சைக்கு தோற்றி சித்தியடைந்தார்.

இவரின் குடும்பம் கல்வியில் பின் தங்கிய நிலை காணப் பட்டாலும்,இவரது இரண்டாவது சகோதரர் ஏ.எச்.எம்.ஜெகுபர் உதவிக் கல்விப் பணிப்பாளர் இவரின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமைந்தது மட்டுமல்லாமல் சிறந்த வழிகாட்டியாகவும் செயற் ப்ட்டார்.பொருளாதார கஸ்டத்தின் மத்தியியிலும் தனது கல்விக்கு முற்றுப் புள்ளி வைத்து விடாமல் தனது கல்வியை தொடர்ந்த இவர் 1981ஆம் ஆண்டு நடை பெற்ற க.பொ.த.உயர் தரப் பரீட்சையில் திருகோணமலை மாவட்டதில் சிறந்த பெறுபேற்றை பெற்றமையினால் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்திக்கு சட்டத்துறை மாணவராக தெனிவானார்.

1982ஆம் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி திருமலையை பிறப்பிடமாக கொண்ட இப்னுசுஹூது என்பவரின் மகளான நோனா எனும் சிறப்புப் பெயரால் அழைக்கப்டும் ஹஸானா உம்மாவை கைபிடித்த சட்டத்தரணி றபீக் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைக்கு தந்தையானார்.

1988 ஆம் ஆண்டு சட்டப் படிப்பை முடித்து ஒரு வழக்கறிஞராக வெளிவந்த இவர் முதியோரை மதிப்பவராகவும்,சிறுவர்களுக்கு அன்பு காட்டுவராகவும் திகழ்த்தார்.

1988ஆம் ஆண்டு ஆங்கில கல்வி ஆசிரியர் வெற்றிடம் நிலவிய காலப் பகுதியில் தான் கற்ற பாடசாலையில் சமூக நலன் கருதி இலவசமாக ஆங்கில கல்வியை போதித்தார்.மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வந்தார் .

இவர் எண்பதுகளில் காணாமல் ஆக்கப் பட்ட செய்தி குடும்பத்தை வந்தடைந்ததும் அவரின் குடும்பம் மட்டுமன்றி அவரின் சொந்த மண்னான கிண்ணியாவே பேரதிர்ச்சியில் உறைந்து போனது.திருகோணமலை மாவட்டத்தில் அற்புதமான சட்டத்தரணியாக விளங்கி,எதிர்காலத்தில் தனக்காக காத்துக் கோண்டிருக்கின்ற தனது சமூகத்திக்கு ஒர் பெருந் தலைவனாக வலம் வருவார் என்ற எதிர்பார்ப்பும் அவரது மறைவோடு புஸ்வானமானது.

அன்னாரது பாவங்களை மண்ணித்து மறுமையில் சுவர்க்கத்தை கொடுத்தருள்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :