கல்முனை பட்டிண சபை எல்லைக்குள் நாளை முதல் லொக் டவுண் என்றும் எப்போது எடுக்கப்படும் என்றும் தெரியாது என்ற அறிவித்தலை தொடர்ந்து அந்த மக்கள் பொருட்கள் வாங்க சாய்ந்தமருது, நிந்தவூர், மருதமுனை என பதறியடித்து ஓடியதை காண முடிந்தது.
கல்முனை சந்தையையும் மூடி, கல்முனைக்குடியின் சில பகுதிகளையும் மூடி, இரவு 8 மணிக்கு மேல் கடைகளை திறக்கவும் கூடாது என்று சட்டமும் போட்டு விட்டு நாளை முதல் லொக் டவுன் என்றால் எப்படியாவது செத்து தொலைங்கடா என்று சொல்வது போல் இருந்தது.
கடைகளில் முண்டியடித்ததை பார்க்கும் போது கல்முனை பட்டிண சபை எல்லையிலிருந்து சாய்ந்தமருது பிரதேச சபைக்குள்ளும், கல்முனை வடக்கு தமிழ்ச்சபைக்குள்ளும், மருதமுனை பிரதேச சபைக்குள்ளும் சென்ற மக்களை பார்த்து, அவர்கள் முண்டியடித்ததால் கொரோனா வந்ததாக சொல்லி நாளை இந்த சபைகளும் மூடப்படலாம்.
இத்தனைக்கும் புட் சிட்டிகளில் அடி பிடி. எவ்வளவு கொமிசனோ தெரியவில்லை.
கொஞ்சம் கூட மக்கள் நலன் புரியாத முஸ்லிம் காங்கிரசை கல்முனை ஆட்சியில் வைத்து விட்டு மக்கள் அல்லோல கல்லோல படுகின்றனர்.
உடனடியாக கல்முனை மாநகராட்சி கலைக்கப்பட்டு அரசின் நேரடி ஆட்சியில் கொண்டு வரப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கிறோம்.
முபாரக் அப்துல் மஜீட்
உலமாக கட்சி
0 comments :
Post a Comment