கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை சுற்றுலாப் பயணிகளுக்காக திறப்பதா இல்லையா என்கிற தீர்மானம் இன்று வெள்ளிக்கிழமை எடுக்கப்படவுள்ளது.
இதற்காக விமான நிலைய நிர்வாக அதிகாரிகள், சுற்றுலாத்துறை அமைச்சு, சுகாதார அதிகாரிகள் இன்று கூடி கலந்துரையாடவுள்ளனர்.
கொரோனா தொற்றின் அச்சுறுத்தலினால் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ள கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ஜனவரி மாதத்திலிருந்து சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்க ஆலோசிக்கப்பட்டது.
சுகாதார நெறிமுறைகளுக்கு அமைய சுற்றுலாப் பயணிகளை நாட்டிற்குள் அனுமதிப்பதற்கான தீர்மானமும் உள்ள நிலையிலேயே மேற்படி கலந்துரையாடல் இன்று நடத்தப்படுகின்றது.
0 comments :
Post a Comment