எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீட்டு வீதி வரையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக பிரகடனமானதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பிரதேசத்தில் தற்போது சன நடமாட்டம் குறைந்துள்ளது. சகல கடைகள் பொது தனியார் நிறுவனங்களும் மூடப்பட்டு பூரண ஒத்துழைப்பை குறித்த பிரதேச மக்கள் வழங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.
கல்முனை பிரதேசத்தில் சில பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்டதையடுத்து தொடர்ந்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் சம்மந்தமாக உயர்மட்ட கலந்துரையாடல் நேற்று பிற்பகல் 5.30 மணிக்கு கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர சபை கூட்ட மண்டபத்தில் நடைபெற்ற கூட்ட தீர்மானத்தின்படி,
மேலும் தொற்றாளர்களை இனங்காண்பதற்காக இன்று (18) முதல் கல்முனை சாஹிரா கல்லூரி வீதியில் இருந்து கல்முனை வாடி வீட்டு வீதி(Rest house Road) வரையில் உள்ள வீதிகள் மற்றும் சகல வர்த்தக நிலையங்கள்,அரச தனியார் நிறுவனங்கள்,கல்முனை சந்தை,கல்முனை பஸார் உட்பட சகல நிறுவனங்களையும் வெள்ளிக்கிழமையில் (18) இருந்து ஞாயிற்றுக்கிழமை வரை முழுமையாக சன நடமாட்டத்தை மட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ள நிலைையில் இன்று (18) குறித்த பிரதேசங்களில் வீதித் தடைகள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு படையினரின் அதிக ரோந்து நடவடிக் களும் இடம் பெற்று வருகிறது.
0 comments :
Post a Comment