கடந்த மூன்று ஆண்டுகளாக "தேர்ந்தெடுக்கப்பட்ட ஆளுமைகளுக்கு" விருதுகள் வழங்கி கௌரவித்து வருகின்றது.
அதேபோன்று 2020ம் ஆண்டுக்கான தமிழகத்தின் மிகச்சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கும் விழா இன்று செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.
தேசிய செயற்குழு உறுப்பினர் முகமது பாரூக், மாநில துணைத் தலைவர் அம்ஜத் பாஷா, செயலாளர்கள் அபூபக்கர் சித்திக், அஹமது நவவி, வழக்கறிஞர் சபியா, பொருளாளர் அபுதாகிர், வர்த்தக அணி மாநில தலைவர் முகைதீன், பொதுச் செயலாளர் கலீல் ரகுமான், எஸ்டிடியூ மாநில பொதுச்செயலாளர் அஜித் ரஹ்மான், மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர் நசீமா பானு, வழக்கறிஞர் அணி மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ராஜாமுகமது மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது வரவேற்றார். செயலாளர் அமீர் ஹம்சா தொகுத்து வழங்கினார்.
பொதுச் செயலாளர்கள் நிஜாம் முகைதீன், அ.ச. உமர் பாரூக் ஆகியோர் நிகழ்ச்சி குறித்து உரையாற்றினர்.
இதில் காயிதே மில்லத் விருது - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் தா. பாண்டியன், தந்தை பெரியார் விருது - தமிழ் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகு, டாக்டர் அம்பேத்கார் விருது - நீலப்புலிகள் இயக்கம் நிறுவனர் மறைந்த டி.எம். உமர் பாருக், காமராஜர் விருது - சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சாதிக், பழனிபாபா விருது - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில செயலாளர் காயல் மகபூப், கவிக்கோ விருது - வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் தி.மு.அப்துல்காதர், அன்னை தெரசா விருது - டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக்நாதன், நம்மாழ்வார் விருது - இயற்கை விவசாயி சரோஜாதேவி ஆகியோருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மாநில தலைவர் முஹம்மது சேக் அன்சாரி, எஸ்டிபிஐ கட்சியின் தேசிய துணைத் தலைவர் தெகலான் பாகவி ஆகியோர் விருது பெற்ற ஆளுமைகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக மாநிலச் செயலாளர் ரெத்தினம் நன்றி கூறினார்.
0 comments :
Post a Comment