J.f.காமிலா பேகம்-
ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு எதிரான விசாரணைகள் முடிவடைந்துவிட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிக்கின்றார்.
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து சட்டமா அதிபருடன் நேற்று செவ்வாய்க்கிழமை பேச்சு நடத்திய அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகள் முடிவடையும் வரை வழக்கு தொடர்வதை தாமதப்படுத்த வேண்டியேற்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கிடைத்தவுடன் 33 பிரதான சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்கு தொடரக் காத்திருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment