தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள கேம்பஸ் பிரண்ட் தேசிய பொதுச் செயலாளரை விடுவிக்க கோரி மாணவர்கள் கைது!!



சென்னை- செய்யது இப்ராஹிம் கனி-
தேசிய மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் ரவூப் ஷரீப் இன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் திருவனந்தபுரத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையினை கண்டித்தும், உடனடியாக அவரை விடுவிக்க கோரியும் நாடு முழுவதும் கேம்பஸ் பிரண்ட் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நாகை, ஈரோடு ஆகிய இடங்களில் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

சென்னையில் மாவட்ட தலைவர் முகமது அக்பர் அலி தலைமையில், கிரீம்ஸ் ரோட்டில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் கலந்து கொண்ட தேசிய குழு உறுப்பினர் முஸ்தபா தெரிவித்திருப்பதாவது,
2021 ஜனவரியில் சிஏஏ, என்ஆர்சி அமல்படுத்துவதற்கு முன்னதாக மாணவர் தலைவர்களையும், இயக்கங்களையும் அச்சுறுத்துவதற்கான பாஜகவின் உத்தரவை அமலாக்கத்துறை நிறைவேற்றி வருகிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கேம்பஸ் ஃப்ரண்ட் தேசிய பொதுச் செயலாளரை உடனடியாக விடுவிக்க கோரியும், தடுப்பு காவலுக்கு எதிராகவும் நாடு தழுவிய போராட்டத்திற்கு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். வரலாற்று சிறப்புமிக்க சிஏஏ, என்ஆர்சி போராட்டத்திற்கு தலைமை தாங்கிய செயற்பாட்டாளர்கள் மற்றும் அமைப்புகளை குறிவைப்பதை நிறுத்துமாறு மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம். அச்சுறுத்தலின் மூலம்
மாணவர்களின் போராட்டத்தை தடுத்து நிறுத்தி விடலாம் என்று பாஜக கனவு காண்கிறது. ஆனால் நாங்கள் எங்கள் பணிகளிலிருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என்று தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து அமலாக்கத் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற மாணவர்களை ஆயிரம் விளக்கு பகுதி காவல் துறையினர் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :