இலங்கையில் காணப்படும் சுமார் 3747 வெளிநாட்டு பட்டதாரிகளுக்கு நியமனம் வேண்டி இன்று ஜனாதிபதிக்கு மகஜர் ஒன்றினை இன்று (14) இலங்கை வெளிநாட்டு பல்கழைக்கழக ஒன்றியம் வழங்கியுள்ளனர்.
நாட்டின் கொரோனா நிலைமைகளைக் கருத்திற் கொண்டு 3747 பேரின் சார்பாகவும் குறிப்பிட்ட சிலர் இன்று கொழும்பு காலி முகத்திடலில் ஒன்றுகூடி கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்தியதுடன் ஜனாதிபதிக்கான மகஜரை ஜனாதிபதி அலுவலகத்தில் கையளித்துள்ளனர்.
தமது கோரிக்கையை ஜனாதிபதியும் அரசும் உடநடியாக கவனத்திற் கொண்டு தமக்கான தீர்வை இம்மாத இறுதிக்குள் பெற்றுத்தராவிடின் நாடளாவிய ரீதியில் தமது போராட்டங்களை நடத்தவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
ஓன்றியத்தின் தலைவர் லஹிரு மற்றும் உறுப்பினர் சமீர் ஆகியோரின் தலைமையில் இவ் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment