கொவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்ட மேல் மாகாண மூவின மக்களுக்கு வை.எம்.எம்.ஏ.யினால் உலர் உணவுப் பொதிகள், அன்பளிப்பு


மினுவாங்கொடை நிருபர்-

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட மேல் மாகாண மூவின மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் மற்றும் ஆயுர்வேதத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் தடுப்பு, நிவாரண ஆயுர்வேத மருந்து வகைகள் என்பன, கடந்த ஒரு மாதமாக அகில இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையினால் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, கொழும்பு மாநகர எல்லை மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில்
இந்தத் திட்டம் மிகச் சிறப்பாக நடாத்தப்பட்டு வருவதாக, வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து சஹீத் எம். ரிஸ்மி தெரிவித்துள்ளார். 

இந்தத் திட்டத்தை நடாத்துவதற்கான நிதி மற்றும் ஏனைய அனைத்து உதவிகளும், நாடளாவிய ரீதியில் மற்றும் வெளிநாடுகளிலுள்ள வை.எம்.எம்.ஏ. உறுப்பினர்கள், தனவந்தர்கள் ஆகியோரின் சிறப்பான பங்களிப்புடன் கிடைக்கப்பெற்று வருவதாகவும் தேசியத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அடிப்படையில், இதன் ஒரு அங்கமாக கண்டி முஸ்லிம் வர்த்தகச் சங்கம் முதற் கட்டமாக, வை.எம்.எம்.ஏ. பேரவையின் தேசியத் தலைவர் தேசபந்து சஹீத் எம். ரிஸ்மியிடம் 5 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலையை வழங்கி வைத்தது.

வை.எம்.எம்.ஏ. சார்பில் தேசியத் தலைவர் இக்காசோலையை, கண்டி முஸ்லிம் வர்த்தகச் சங்கத் தலைவரும் ஒராபி பாஷா பணிப்பாளருமான அல்ஹாஜ் சலீம் தீனிடமிருந்து பெற்றுக்கொண்டார்.

 முஸ்லிம் வர்த்தகச் சங்கச் செயலாளரும் மஹியாவ வை.எம்.எம்.ஏ. ஸ்தாபனத் தலைவருமான அல்ஹாஜ் முஜீபுர் ரஹ்மான் மற்றும் வர்த்தகச் சங்க அங்கத்தவர்கள் ஆகியோரது முன்னிலையில் குறித்த காசோலை கையளிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :