நாளை முதல் கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகள் ஆரம்பம்! சுகாதாரப்பணிப்பாளர்


காரைதீவு நிருபர் சகா-
ல்முனைக்கல்வி மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளைத்தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 10 தரம் 11 தரம் 12 தரம் 13 ஆகிய வகுப்புக்களை நாளை(9) புதன்கிழமை முதல் கிரமமாக நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தப்பட்ட அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை ஆலையடிவேம்பு பிரதேச பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை திறக்கப்படமாட்டாது. 

எனவே அவை தவிர்ந்த கல்முனைக்கல்வி மாவட்டத்திலுள்ள ஏனைய கல்முனை சம்மாந்துறை திருக்கோவில் வலயப்பாடசாலைகளில் மேற்படி வகுப்புகளை சுகாதார நடை முறைக்கிணங்க நடாத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.

கல்முனைப் பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் குணசிங்கம் சுகுணன் தலைமையில் வலயக்கல்விப்பணிப்பாளர்களுடனான கூட்டம் அவரது பணிமனையில் நேற்று(8) செவ்வாய்க்கிழமை இடம்பெற்றபோது மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

கூட்டத்தில் வலயக் கல்விப் பணிப்பாளர்களான எஸ்.புவனேந்திரன் (கல்முனை) எம்.எஸ்.சஹதுல் நஜீம் (சம்மாந்துறை) யோ.ஜெயச்சந்திரன் (திருக்கோவில்) ஏ.எல்எ.ம்.ஹாசிம் (அக்கரைப்பற்று) ஆகியோர் கலந்துகொண்டு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

கிழக்கு ஆளுநர் அறிவித்த கொரோனா விசேட விடுமுறையின் பின்னர் கடந்த திங்கட்கிழமை (7) முதல் கல்வியமைச்சின் அறிவுறுத்தலுக்கமைய பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும் மாணவரின் சராசரி வரவு 5வீதமாக இருப்பதை கல்விப்பணிப்பாளர்கள் சுட்டிக்காட்டினர். ஆசிரியர்களின் வரவும் சராசரி 60-65வீதமாக இருப்பதாகக்கூறினர்.

திருக்கோவில் வலயத்தில்...
திருக்கோவில் வலயத்தில் உள்ள ஆலையடிவேம்புக்கோட்டம் தனிமைப்படுத்தப்பட்டு பாடசாலைகள் ஏலவே மூடப்பட்டுள்ளன.

எனவே அது தவிர்ந்த திருக்கோவில் மற்றும் பொத்துவில் கோட்டங்களிலுள்ள பாடசாலைகள் மாத்திரம் கடந்த இருதினங்களாக இயங்கியது.

திருக்கோவில் வலயத்தில் கடந்த இருதினங்களாக க.பொ.த. சா.த மற்றும் உயர்தரவகுப்புகளை மாத்திரமே அங்குள்ள சுகாதாரவைத்திய அதிகாரியின் ஆலோசனையுடன் நடாத்தியதாகவும் அதற்கமைய ஆலையடிவேம்புக்கோட்டம் தவிர்ந்த பத்துப் பாடசாலைகள் திறக்கப்பட்டபோதிலும் திங்களன்று 13வீத மாணவர்களும் செவ்வாயன்று 27வீத மாணவர்கள் பாடசாலைக்கு சமுகமளித்தனரென்றும் ஆசிரியாகள் 66வீதம் சமுகமளித்ததாகவும் திருக்கோவில் வலயக்கல்விப்பணிப்பாளர் யோ.ஜெயச்சந்திரன் சுட்டிக்காட்டிப்பேசினார்.

அங்கு திருக்கோவில் கோட்டத்தில் தாண்டியடிப்பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்டகாரணத்தினால் அதற்குள் உள்ள மாணவர்கள் பாசாலைக்கு சமுகமளிக்கவில்லை என்றும் வெளியுர் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள அக்கரைப்பற்று தாண்டி போக்குவரத்திலீடுபடமுடியாதலால் அவர்கள் வரவில்லையென்றும் கூறினார்.

இறுதியில் நாளை (9) புதன்கிழமை முதல் சமூக இடைவெளியைப்பேணி சுகாதார நடைமுறையைப்பேணி மேற்படி நான்கு வகுப்புகளையும் நடாத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :