நிலாவெளி சுற்றுலா ஹோட்டலில் ஹொங்கொங் யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஒரு வருடக்கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அத்தண்டனை ஐந்து வருடத்திற்கு ஒத்தி வைத்து தீர்ப்பு



எப்.முபாரக்-
திருகோணமலையில் நிலாவெளி சுற்றுலா ஹோட்டலில் ஹொங்கொங் யுவதியை துஷ்பிரயோகம் செய்த குற்றவாளிக்கு ஒரு வருடக்கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு அத்தண்டனை ஐந்து வருடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரி ரத்நாயக்க புதன்கிழமை (09) இக்கட்டளையைப் பிறப்பித்தார்.
இக்குற்றவாளி இரத்னபுரி-ஓபனாயக பகுதியைச் சேர்ந்த டபிள்யூ. அஜித் சஞ்சீவகுமார(38 வயது எனவும்) பொலிஸார் தெரிவித்தனர்.
2020 ஆறாம் மாதம் 28ஆம் திகதி நிலாவெளி சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த ஹொங்கொங் நாட்டைச் சேர்ந்த 28 வயதுடைய யுவதிக்கு பாலியல் சேட்டை செய்த குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலை துறைமுக பொலிசார் கைது செய்தனர்.

கைது செய்து குறித்து சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில் குறித்த நபர் பிணையில் விடுவிக்கப்பட்டு துறைமுக பொலிசாரினால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் குற்றத்தைத் தான் செய்ததாக நீதவான் முன்னிலையில் ஒப்புக்கொண்டுள்ளார்.
குறித்த குற்றவாளிக்குத் திருகோணமலை நீதிமன்ற பிரதம நீதவான் சமிலா குமாரிரத்னாயக்க ஒரு வருடக் கடூழியச் சிறைத் தண்டனை விதித்ததுடன் ஐந்து வருடத்துக்கு ஒத்திவைத்துள்ளார்.
இதே நேரம் தான் செய்த குற்றத்திற்காக 1500 ரூபாய் தண்டப்பணம் செலுத்துமாறும் அதனைச் செலுத்தத் தவறும் பட்சத்தில் ஒரு மாதகால சிறைத் தண்டனை விதிக்குமாறும் பாதிக்கப்பட்ட ஹொங்கொங் நாட்டு யுவதிக்கு ஒரு இலட்சம் ரூபாய் நஷ்ட ஈடுவழங்குமாறும் அதனைச் செலுத்தத் தவறினால் 6 மாத கால கடூழியச் சிறைத் தண்டனைவழங்குமாறும் நீதவான் கட்டளையிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :