ஹஸ்பர் ஏ ஹலீம்-
மக்களால் மக்களுக்கு அமைப்பின் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக திருகோணமலை மூதூர் பாட்டாளிபுரம் பாமகள் பாடசாலையின் இவ்வருடம் சாதாரணதரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் 19 பேருக்கு 3 மாதங்களுக்கு மதிய உணவு வழங்கி வைக்கும் நிகழ்வு அண்மையில் பாடசாலையில் வைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வறுமை காரணமாக பாடசாலைக்கு வருகை குறைவு போன்ற பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து இவ்வாறான ஏற்பாடுகள் இடம் பெற்றதாக அமைப்பினர் தெரிவித்தனர்.
இந்நிகழ்வில் மக்களால் மக்களுக்கு அமைப்பின் அமைப்பாளர் திரு.கிஷான் குமார், அமைப்பின்உறுப்பினர்கள், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment