பங்களாதேஷின் புதிய உயர் ஸ்தானிகர் வரவு



சில்மியா யூசுப்-
ங்களாதேஷின் புதிய உயர் ஸ்தானிகர் தாரிக் எம்.டி.அரிபுல் இஸ்லாம் கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
இவர் எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கொழும்புக்கு வருகை தந்த இவர் தற்போது கொழும்பில் தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் இரண்டு வாரங்கள் சுய தனிமைப்படுத்தலில் உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
முன்னாள் பங்களாதேஷ் உயர் உயர்ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாவிற்கு பதிலாக இவர் தன் கடமையை பொருப்பேற்க உள்ளார்.
தாரிக் எம்.டி அரிபுல் இஸ்லாம் தொழில் இராஜதந்திரம் மற்றும் 1998 இல் பங்களாதேஷ் வெளியுறவு சேவையில் சேர்ந்தார்.
இவர் தற்போதைய பதவியை ஏற்றுக்கொள்வதற்கு முன்பு, நிவ்யோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பங்களாதேஷின் நிரந்தர காரியாலத்தில் துணை நிரந்தர பிரதிநிதியாக 2016 முதல் 2020 ம் ஆண்டு வரை கடமையாற்றினார்.

முதல் செயலாளர் ஆலோசகராக இருந்த அதே காரியாலயத்தில் (2005-2009) வரை அவர் முந்தைய பணியைக் கொண்டிருந்தார்.

பின்னர் இந்தியாவின் கொல்கத்தாவில் உள்ள பங்களாதேஷ் துணை உயர் ஸ்தானிகராலயத்தில் (2009-2012) ஆண்டு ஆலோசகராக பணியாற்றினார். மேலும் இவர் பங்களாதேஷின் வெளியுறவு அமைச்சகத்தில் பொது இயக்குனராக (தெற்காசியா பகுதியில் பணியாற்றினார், அதற்கு முன்னர் இயக்குனர் (வெளியுறவு அமைச்சர் அலுவலகம்) மற்றும் பணியாளர் பிரிவு மற்றும் வெளியுறவு செயலாளர் உள்ளிட்ட பல்வேறு திறன்களில் பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :