ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்டம் தம்பலகமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள 12 கிராம சேவகர் பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வு இன்று (16) இடம் பெற்றதுடன் இதனை ரின்கோ எயிட் நிறுவனம் மூலமாக மொத்தமாக 1000 தென்னை மர கன்றுகள் பிரதேச செயலகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் சிராஜ் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் கிராம அதிகாரி ஏ.முனாஸ் அவர்களின் தலைமையில் கிராம அதிகாரி காரியாலயத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.
இதில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரீ.பாயிஸ்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.றபீக் உட்பட பட்டதாரி பயிலுனர்களும் கலந்து சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment