ஜனாதிபதி கோத்தபாயவின் சௌபாக்யா வேலைத்திட்டத்தின் கீழ் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் ஒரு பகுதியாக சமுர்த்தி பயனாளிகளுக்கான மரக்கன்று விநியோகிக்கும் நிகழ்வு இடம் பெற்றது.
குறித்த நிகழ்வானது இன்று (11) தம்பலகாமம் பிரதேச செயலக செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சிராஜ் நகர் கிராம சேவகர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எம்.றபீக் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது. சிராஜ் நகர் கிராம அதிகாரி காரியாலயத்தில் வழங்கி வைக்கப்பட்ட மரக்கன்றுகளில் தென்னை கன்றுகள் சுமார் 31 வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
சமுர்த்திர்த்தி பயனாளிகளுக்கான வழங்கப்படும் இவ்வாறான திட்டங்கள் நாட்டின் அபிவிருத்திக்கும் வீட்டுத் தோட்ட உற்பத்திக்கும் பாரிய பங்காற்றுவதாக அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரீ.பாயிஸ் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரீ.பாயிஸ், பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் பங்கேற்றார்கள்.
குறித்த நிகழ்வில் அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரீ.பாயிஸ், பட்டதாரி பயிலுனர்கள் என பலரும் பங்கேற்றார்கள்.
0 comments :
Post a Comment