கடந்த தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்காதன் எதிரொலியே ஜனாஸா எரிப்பு



தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன்.

எப்.முபாரக்-
டந்த தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் அரசாங்கத்திற்கு வாக்களிக்காதன் எதிரொலியே ஜனாஸா எரிப்பு என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தேசியத் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார்.
வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு நேற்று(12) மாலை கட்சியின் அலுவலகத்தில் வழங்கிய செவ்வியின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:
நாட்டில் காணப்படுகின்ற ஜனநாயக அதிகாரங்களை ஜனாதிபதி சிறந்த முறையில் கையாள வேண்டும்,நிறைவேற்று அதிகார முறைகளை மூவின மக்களும் பயன்பெறுகின்ற வகையில் அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் நாட்டில் நடைபெற்ற தேர்தல்களில் முஸ்லிம் மக்கள் ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்திற்கு வாக்களிக்கவில்லை அதனை பலிதீர்க்கின்ற ஒரு செயற்பாடு தான் இந்நாட்டில் தற்போது இருக்கின்ற ஜனாஸா எரிப்பு விவகாரமாகும்.
தற்போது இலங்கையிலும் வெளிநாடுகளிலும் பரவலாக முஸ்லிம் மக்களின் ஜனாஸா எரிப்பு வலுப்பெற்றிருக்கின்ற நிலையிலும் அரசாங்கம் சற்றும் இவ்விடயத்தில் தளராது பலி தீர்க்கும் செயற்பாட்டிலே இருந்து கொண்டிருக்கின்றது.
நாட்டில் முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கூட மறுக்கப்பட்டு வருகின்றன சமயக் கடமைகளை நிறைவேற்ற முடியவில்லை,மத்ரஸாக்களை நடத்த முடியாது போன்ற செயற்பாடுகளை கூட இந்நாட்டில் மேற்கொள்ள முடியாத நிலையில் முஸ்லிம் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
கடந்த தேர்தல்களில் வாக்களித்து முஸ்லிம் முஸ்லிம் தலைவர்கள் ஆட்சியிலுள்ள கட்சியோடு இணைந்திருந்தால் இவ்வாரான செயற்பாடுகள் நடைபெற்றிருக்காது,முற்று முழுதாக பலி தீர்க்கின்ற செயற்பாடாகவே இது அமைந்துள்ளது என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :