இலங்கை தவிர உலகம் முழுதும் கொரோனா!- இது ஓர் ஆதங்கப் பதிவு



-எஸ்.ஹமீத்-
ன்னும் ஐந்தோ,பத்தோ வருடங்களில் உலகம் முழுவதும் கொரோனாவினால் மூழ்கிப் போயிருக்க, நமது நாடான இலங்கை மட்டும் எவ்வித பாதிப்புமின்றி நிம்மதியாக இருக்கப் போகிறது. இத்தகு பேராற்றலும் பெருமையுமிக்க சாதனைக்குக் காரணமான நமது ‘சுகாதார நிபுணர்கள் குழு’ வுக்கு இப்போதே விருதுகள் வழங்கி எமது பாராட்டுகளை அள்ளி வழங்குவோம்.

மண்ணையும் நீரையும் கையால் கூடத் தொட்டுப் பாராமல், ஓர் ஆய்வுகூடப் பரிசோதனையை விளையாட்டாகவாவது செய்து பார்க்காமல், உலக சுகாதார விற்பன்னர்களின் பரிந்துரைகளப் பற்றிக் கொஞ்சம் கூடக் கவலையில்லாமல், வைரஸ்கள் பற்றிய ஞானமும் நல்லறிவும் பல்லாண்டுகள் ஆராய்ச்சி அனுபவமுமுள்ள மேதைகளின் முடிவுகளைப் பற்றிய எவ்வித அக்கறையுமில்லாமல்- இனவாதமும் இனவெறியும் இரத்தத்தில் ஊறிப்போன இனத்துவேஷமும் மட்டுமே தங்கள் பரிசோதனைக் குழாய்களாக, நுணுக்குக்காட்டிகளாக,இரசாயனங்களாகக் கொண்டு-
இறந்த உடல்களைப் புதைத்தால் ‘எதிர்காலத்தில்’ நிலத்தடி நீரினூடாக வைரஸ் பரவுமென இந்த உலகத்தையே பைத்தியக்கார உலகமாக எண்ணி இன்னமும் உளறிக்கொண்டிருக்கும் நமது ‘சுகாதார நிபுணர்கள் குழுவுக்கு’ நோபல் பரிசு கூட வழங்கலாம்.

‘இப்படிக் கூட உங்கள் நாட்டில் நிபுணர்கள் இருக்கிறார்களா?’ எனக் கேட்டு அன்னிய நாட்டவன் கேலி செய்யும் அளவிற்கு நமது நிபணர்கள் குழு இருக்கிறதென்றால் பாருங்களேன்.

ஆனாலும்,

‘உங்கள் நாட்டு நிபுணர் குழுவிடம் நாங்கள் கல்வி கற்றுக்கொள்ள விரும்புகிறோம்; கொஞ்சம் ஆவன செய்யுங்களேன்’ என்று உலக விஞ்ஞானிகள் எல்லாம் ஒருசேர விண்ணப்பம் செய்யும் அளவிற்கு நமது நாட்டின் புகழ் இந்த நிபுணர்கள் குழுவால் உயரத்தான் போகிறது என்று நான் கூறுவதை நீங்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்.

இறுதியாக,

எங்கள் நிபுணர் குழு எடுத்துச் சொன்ன மாபெரும் விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நமது நாட்டின் பொன்னான சட்டமாக்கி,இருபது நாளேயான பச்சிளம் குழந்தைக்கும் கொரோனா பட்டம் சூட்டி எரிக்கும் இந்த அரசாங்கத்தின் ‘பாரபட்சம்’ என்னும் திரைப்படத்திற்கு ஆஸ்கார் விருதும் வழங்கப்பட இருக்கிறது என்பதையும் முற்கூட்டியே தெரிவித்துக் கொள்கிறேன்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :