கொரோனா தொற்றினால் இறந்ததாக அறிவிக்கப்பட்டு தொடர்ந்தும் எரிக்கப்பட்டு வரும் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி இலங்கையிலும் இலங்கைக்கு வெளியேயும் பல்வேறு கவனயீர்ப்பு நடவடிக்கைகள் நடைபெற்றுவருகின்றது.
அதில் ஒரு அங்கமாக சிரேஸ்ட சட்டத்தரணி எம்.ஐ ரைசூல் ஹாதி தலைமையில் பொது அமைப்பு பிரதிநிதிகள் பலர் இணைந்து மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜூம்ஆப்பள்ளிவாசலில் முன்னால் வெள்ளை துணிகளை கட்டி முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனும் கோரிக்கையுடன் 'கவன் சீலை போராட்டம்' எனும் போராட்டம் ஒன்றை இன்று (14) முற்பகல் முன்னெடுத்தனர்.
இதே போன்று அம்பாறை மாவட்டத்தில் அடையாள போராட்டத்தை பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments :
Post a Comment