கல்முனைப்பிராந்திய தமிழ் இளைஞர்சேனை தமிழ் இளைஞர் ஒன்றியம் புத்திஜீவிகள் ஒன்றியம் போன்ற பொதுஅமைப்புகள் ஒன்றிணைந்து நடாத்திய கல்முனைமாநகரசபை பட்ஜட் தொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவுட்டும் கலந்துரையாடலும் ஊடகச்சந்திப்பும் சுகாதார அதிகாரிகள் பொலிசாரின் தலையீட்டால் இடைநடுவில் கலைந்தது.
இச்சம்பவம் நேற்று(6) பாண்டிருப்பில் இடம்பெற்றது. மேற்படி கூட்டம் பாண்டிருப்பு 1சி பல்தேவைவக்கட்டடத்தில் 10.30 மணியளவில் பொதுஅமைப்புகளின் பிரதிநிதி க.வரதராஜன் தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மாநகரசபை பட்ஜட்டுக்கு வாக்களித்த தமிழ் உறுப்பினர்கள் அனைவருக்கும் பொது அமைப்புகளால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
ஆனால் எதிர்ப்பாக வாக்களித்த த.தே..கூட்டமைப்;பைச்சேர்ந்த சந்திரசேகரம் ராஜன் க.சிவலிங்கம் த.வி.கூட்டணியைச்சேர்ந்த எஸ்.செல்வராசா வ.சந்திரன் கே.விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே சமுகமளித்திருந்தனர். ஆதரவாக வாக்களித்த தமிழ்உறுப்பினர்கள் யாருமே வரவில்லை.
மாநகரசபை உறுப்பினர்களான க.சிவலிங்கம் சந்திரசேகரம் ராஜன் ஆகியோர் பொதுமக்களுக்கு விளக்கமளித்துக்கொண்டிருந்தவேளை சுமார் 11.15மணியளவில் கல்முனை வடக்கு பிரதேச சுhதாரவைத்தியஅதிகாரி டாக்டர் கே.கணேஸ்வரன் கல்முனை மாநகரசபை பிரதமசுகாதாரவைத்தியஅதிகாரி டாக்டர் அர்சாத் காரியப்பர் சகிதம் பொலிசார் சமுகமளித்தனர்.
கொரோனாச்சட்டத்தின்படி இப்பிராந்தியத்தில் பொதுக்கூட்டம் ஒன்றுகூடல் நடாத்தமுடியாது எனவே கலைந்து செல்லுங்கள் என கேட்டுக்கொண்டனர்.
அதற்கிணங்க கூட்டம் இடைநடுவில் கலைந்தது. பிறிதொரு தினத்தில் உரிய அனுமதிபெற்று கூட்டம் நடாத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.
0 comments :
Post a Comment