இது தொடர்பில் அவர் இன்று (17.12.2020) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
" இந்நாட்டில் வாழும் சிறுபான்மையின மக்கள் உண்பதற்காக மட்டுமே வாய்திறக்கவேண்டும், அவர்களுக்கு ஒருபோதும் உரிமைகள் வழங்கப்படக்கூடாது என்ற மமதையில் செயற்படும் பேரினவாத அரசியல்வாதிகள், அரசியலமைப்பு ரீதியாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளைக்கூட பறிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, அதற்கான சதித்திட்டங்களை தீட்டிவருகின்றனர். இதன்ஓர் அங்கமாகவே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படக்கூடாது, அம்முறைமை நீக்கப்படவேண்டும் என மீண்டும் கோஷமெழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
புதியதொரு அரசியலமைப்பு இயற்றப்படவுள்ள சூழ்நிலையில், மாகாணசபை முறைமைக்கு எதிராக அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் இனவாதிகள் போர்க்கொடி தூக்கியுள்ளமை பலத்த சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.
குறிப்பாக தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாணசபை முறைமையை புதிய அரசியலமைப்பின் ஊடாக பலவீனப்படுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றதா என்ற அச்சமும் மேலோங்கியுள்ளது. மத்தியிலிருந்து மாகாணங்களுக்கு மேலும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும், மாகாணசபைகள் முறைமை மேலும் பலப்படுத்தப்படவேண்டும் என தமிழ் பேசும் மக்கள் கோரிக்கை விடுத்துவரும் நிலையில், அவர்களின் உரிமைக்குரலை நசுக்குவதற்காக - ஒடுக்குவதற்காக அரசாங்கம், திட்டமிட்ட அடிப்படையில் இனவாதிகளை களமிறங்கியுள்ளதா என்ற வினாவும் எழுகின்றது.
அதேவேளை, தம்வசம் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. பெரும்பான்மையின மக்களை இயக்கக்கூடிய இனவாத சக்திகள் உள்ளன என்ற நம்பிக்கையில் அரசாங்கம், மாகாணசபை முறைமையில் கைவைக்கும் பட்சத்தில் அது பாதகமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். இராஜதந்திர மட்டத்திலான நெருக்கடிகளையும் சந்திக்கவேண்டிவரும்.
எனவே, மாகாணசபை முறைமையில் கூடிய விரைவில் அரசாங்கம் நடத்தவேண்டும். அதன்பின்னர் புதிய அரசியலமைப்பு ஊடாக மாகாணசபை முறைமையை பலப்படுத்தவேண்டும்." - என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment