தனிமைப்படுத்தல் பிரதேச ஊடகவியலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சிலோன் மீடியா போரம் !



அபு ஹின்ஸா-
டந்த மூன்று வாரங்களாக தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவில் வசிக்கும் ஊடகவியலாளர்களின் நன்மை கருதி சிலோன் மீடியா போரத்தினால் உலருணவுகள் வழங்கும் நிகழ்வு இன்று (17) மாலை அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி, உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ மஜீட், செயலாளர் எம்.எஸ்.எம். முஜாஹித், பொருளாளர் யூ.எல்.என். ஹுதா, பிரதித்தலைவர் எஸ். அஸ்ரப் கான், உட்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்பட்டிருந்த அக்கறைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, பாலமுனை, ஒலுவில் பிரதேச தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :