எஸ்டிபிஐ கட்சி இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனை கூட்டம். மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் பங்கேற்பு!



செய்யது இப்ராஹிம் கனி-
எஸ்டிபிஐ கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் இராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்றது.

மாவட்டத் தலைவர் நூர்ஜியாவுதீன் தலைமை தாங்கினார்.

மாவட்ட பொதுச்செயலாளர் பரக்கத்துல்லாஹ் , செயலாளர் முஹம்மது இஸ்ஹாக் , பொருளாளர் ஹசன் அலி , முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி தலைவர் ராஜா , திருவாடானை சட்டமன்ற தொகுதி தலைவர் அபுல் கலாம் ஆசாத் , இராமநாதபுரம் ( கிழக்கு ) தொகுதி தலைவர் நவ்வர்ஷா , இராமநாதபுரம் ( மேற்கு ) தொகுதி தலைவர் ஜமீல் , விமன் இந்தியா மூவ்மெண்ட் மாவட்டத் தலைவி டாக்டர் ஜெமிலுன் நிஷா , வர்த்தகர் அணி மாவட்ட தலைவர் சாதிக்குல் அமீன் , தொழிற்சங்க மாவட்ட தலைவர் முஸ்தாக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பெரோஸ்கான் வரவேற்றார்.

இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் நெல்லை முபாரக் , பொதுச் செயலாளர் அப்துல் ஹமீது , செயலாளர் அகமது நவவி ஆகியோர் கலந்துகொண்டு தேர்தல் சம்பந்தமாக நிர்வாகிகளிடம் கலந்துரையாடினார்.

கீழக்கரை நகராட்சி முன்னாள் துணை தலைவரும், மூர் டிராவல்ஸ் உரிமையாளருமான ஜெயினுதீன் தனது ஆதரவாளர்களுடன் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் முன்னிலையில் எஸ்டிபிஐ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார்.

இதில் மாநில பேச்சாளர் அஸ்கர் அலி, மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் அஜ்மல் செரிப், தேர்தல் பணிக்குழு ஊடகப் பொறுப்பாளர் அப்பாஸ், இராமநாதபுரம் (மேற்கு) தொகுதி துணைத்தலைவர் நவாஸ்கான், நகர் தலைவர் நஜிமுதீன், செயலாளர் சகுபர் சாதிக், பொருளாளர் அப்துல் ரகுமான் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி செயற்குழு உறுப்பினர்கள், செயல்வீரர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாவட்ட துணைத்தலைவர் சுலைமான் நன்றி கூறினார்.

சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்த மாநில நிர்வாகிகளுக்கு இராமநாதபுரம் நகர் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :