நவீனமயப்படுத்தப்பட்ட குழந்தைவிடுதி விளையாட்டுமுற்றம் திறப்புவிழா.



அதிதிகளாக இதயநோயியல்நிபுணர் அருள்நிதி அசிஸ்ற்ஆர்ஆர் பிரதிநிதி ஹென்றி.
வி.ரி.சகாதேவராஜா-
ல்முனை ஆதாரவைத்தியசாலையில் நவீனமாக புனரமைக்கப்பட்ட குழந்தைவிடுதியும் விளையாட்டுமுற்றமும் வைத்தியஅத்தியட்சகர் வைத்தியகலாநிதி இரா.முரளீஸ்வரன் தலைமையில் திறந்துவைக்கப்பட்டன.

ஜக்கியஅமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபன(IMHO) நிதியுதவியுடன் அசிஸ்ற் ஆர்ஆர்(Assist RR )நிறுவனம் பலலட்சருபா செலவில் இதனை புனரமைத்துக்கொடுத்துள்ளது.

திறப்புவிழாவில் சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபனத்தின் பிரதிநிதியான மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையின் இதயவியல் மருத்துவநிபுணர் வைத்தியகலாநிதி கனகசிங்கம் அருள்நிதி அசிஸ்ற் ஆர்ஆர் நிறுவனத்தின் இலங்கைக்கான தலைவர் பொறியியலாளர் ஹென்றிஅமல்ராஜ் ஆகியோர் அதிதிகளாகக் கலந்துசிறப்பித்தனர்.
ஏலவேயிருந்த குழந்தைவிடுதியில் குழந்தைகளுக்கு உவப்பானவகையில் பலவித நவீனவசதிகளை ஏற்படுத்தியதுடன் பலவர்ணங்களில் சூழலும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

விடுதிக்கு அருகே குழந்தைகள் பெரிதும் ரசித்துவிளையாடும் விளையாட்டுபகரணங்கள் பொருத்தப்பட்டு சுற்றுவர பாதுகாப்புஅரணும் அமைக்கப்பட்டுள்ளது.

இவற்றை அதிதிகள் சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தனர்.

குழந்தைநலமருத்துவநிபுணர் வைத்தியகலாநிதி கே.ருஷாந்த் பதில் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி நடராசா ரமேஸ் உள்ளிட்ட அதிகாரிகளும்கலந்து கொண்டனர்.
சுகாதார நடைமுறைக்கிணங்க ஒருசிலரே இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஜக்கியஅமெரிக்க சர்வதேச மருத்துவ சுகாதார ஸ்தாபன(IMHO) தலைவர் வைத்தியகலாநிதி ராஜம் அதற்கு நிதியுதவி நல்குவோர் அதன் பிரதிநிதி அருள்நிதி மற்றும் இதனை சிறப்பாகவும் சீராகவும் செய்துதந்த அசிஸ்ற் ஆர்ஆர் அமைப்பின் தலைவர் ஹென்றி உள்ளிட்டோர் பாராட்டுக்குரியவர்கள் மட்டுமல்ல நன்றிக்குமுரியவர்கள் என்று வைத்தியசாலையின் சார்பில் நன்றியுரைக்கையில் கூறப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :