கண்டி மாநகர எல்லைப்பகுதிக்குள் மூடப்பட்டிருந்த 48 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம் மீண்டும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே தெரிவித்துள்ளார்.
இன்று கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். 3 பாடசாலைகளை தவிர ஏனைய அனைத்து பாடசாலைகளையும் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
இதுதொர்பாக வலய கல்வி பணிப்பாளர்களினால் அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். தற்போதைய கொவிட் - 19 தொற்றின் காரணமாக கண்டியில் மாநகர எல்லைப்பகுதிக்ககுள் உள்ள பாடசாலைகள் டிசம்பர் மாதம் 04 திகதி தற்காலிகமாக மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விடுமுறை காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் தொடர்பாக சுகாதார அதிகாரிகளுடனான கலந்துரையாடலின் பின்னர்; அவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
0 comments :
Post a Comment