மருதூரின் இலக்கிய சிறகு உடைந்தது : காலமான கலாபூஷனம் மருதூர் ஏ.மஜீடுக்கு ஹரீஸ் எம்.பி இரங்கல்.



அபு ஹின்ஸா-  
ய்வுபெற்ற வலயக்கல்விப் பணிப்பாளரும், மூத்த இலக்கிய ஆளுமையுமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் மக்கள் இயக்கத்தின் செயற்பாடுகளுக்கு பக்கபலமாக ஆலோசனைகள் வழங்கிய பன்னூலாசிரியர் கலாபூஷனம் மருதூர் ஏ.மஜீட் அவர்களின் மறைவு பிரதேசத்தின் கல்வி, கலை, இலக்கியத் துறைகளுக்கு மிகப்பெரும் பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸ் (பா.உ) வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த செய்தில்

பாராளுமன்ற உறுப்பினராக நான் தெரிவானதிலிருந்து பிரதேசத்தின் கலை, இலக்கிய சமூக மேம்பாட்டுக்கு தேவையான ஆலோசனைகளை எனக்கு எப்போதும் நெருக்கமாக இருந்து வழங்கி வந்தார்.
அன்னார் கலை, இலக்கிய, கவிதை துறையில் ஜாம்பவானாக இருந்து பல நூல்களை எழுதியுள்ளார். மட்டுமின்றி சுவைபட பேசும் ஆற்றல் மிக்க ஆளுமை எங்களை விட்டு பிரிந்து சென்றுள்ளது.
அன்னாருக்கு ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் உயர்ந்த சுவர்க்கம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்.
அன்னாரது இழப்பினால் துயருற்றிருக்கும் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆழந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :