பாபாஜீ-
கொரோனா வைரஸ் தொற்றில் மரணிக்கும் முஸ்லீம்களின் உடல்களை எரிக்கக் கூடாது என்றும் இலங்கையில் சுகாதார நிபுணர்களின் நடவடிக்கையையும் அவர்களின் கருத்தையும் கண்டித்தும் பிரித்தானியாவில் தொடர்ந்து நான்கு மணி நேரமாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் சற்று முன்னர் நிறைவு பெற்றது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்கள் மாத்திரமன்றி வெளிநாட்டவர்களும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர் அத்துடன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தானிய வைத்தியசாலையின் கொவிட் -19 பிரிவு வைத்திய நிபுனர் ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்:
இலங்கை சுகாதார நிபுணர் குழுவின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை மாத்திரமன்றி இது நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கும் நடவடிக்கை என்றும் உலகமெல்லாம் ஒரே விஞ்ஞானக் கருத்துக்கள் இருக்க இலங்கையில் மாத்திரம் வேறொரு விஞ்ஞானக் கருத்து கூறப்படுவதானது சுகாதாரத்துறைக்குள் இனவாத அரசியல் ஊருடுவியுள்ளமை சந்தேகமின்றி புலனாகிறது என்று தெரிவித்தார்.
மேலும் ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்டோர் பிரித்தானியாவில் பல இடங்களிலும் இருந்து வந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment