வழக்குத்தாக்கல் செய்தது பதவி நிலை அதிகாரிகளுக்கே அன்றி தனி நபர்கள் மீது கொண்ட கோபத்தினால் அல்ல

பைஷல் இஸ்மாயில் -

ஸ்ரீலங்கா முஸ்லிம் காஙகிரஸ் கட்சியின் ஊடாக ஆட்சி பீடம் வந்தவர்கள் செய்யும் செயற்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியையும், அதன் தலைமையையும் விமர்சித்து வருகின்ற விடயம் கவலை தரக்கூடியதாக இருக்கின்றது என்று அக்கட்சியின் ஆரம்பகால போராளியும் பாலமுனை பிரதேச அமைப்பாளருமாகிய ஏ.எல்.எம்.அலியார் தெரிவித்தார்.

ஜனாஸா எரிப்பு தொடர்பில் (30) பாலமுனை அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

பெரும் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் என்ன நோக்கத்துக்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை உருவாக்கினாரோ அதே நோக்குடன் இன்றைய தலைவர் ரவூப் ஹக்கிம் மிக நிதானமாக சகல விடயங்களையும் கட்சிதமாக முன்னெடுத்துச் செல்கின்றார். ரவூப் ஹக்கிம் என்பவர் கட்சியின் தலைமைப் பதவியை எடுத்த காலத்திலிருந்து இன்றுவரை தூய சிந்தனையுடனும், தூர நோக்குடனும், மிக நிதானப் போக்குடனுமே நடந்து வருகிறார்.

முஸ்லிம் காங்கிரஸையும், அதன் தலைமைத்துவத்தையும் குறைகூறும் அளவுக்கு அவர் இன்றுவரை நடக்கவில்லை. ஆனால் இந்தக் கட்சியின் ஊடாக ஆட்சி பீடம் ஏறியவர்களின் செயற்பாடுகளும், சிந்தனைகளுமே வேறுபாடாகக் காணப்படுகின்றது. அவர்களின் செயற்பாடுகளை வைத்துக்கொண்டு கட்சியையும், அதன் தலைமையையும் விமர்சித்து வருகின்ற விடயம் கவலை தரக்கூடியதாக இருக்கின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாஸா எரிப்பு விடயம் தொடர்பில் இடம்பெறுகின்ற அநீதிக்கு எதிராக ரவூப் ஹக்கிம் எந்த முன்னெடுப்புக்களையும் எடுக்காது வாய் திறக்காமல் மௌனியாக இருந்து வருகின்றார் என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். அவர் முன்னெடுத்து வருகின்ற எல்லா விடயங்களையும் அவருடன் மிக நெருக்கமாக இருக்கின்றவர்கள் நன்கறிவார்கள். இந்த விடயங்கள் எல்லாம் ஊடகங்களில் வருவதில்லை.

ஜனாஸா எரிப்புக்கு எதிரான கபன் சீலை கவனயீர்ப்பு போராட்டத்தை தூய என்னத்துடன் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிசாஹிர் மௌலான ஆரம்பித்து வைத்தார். இப்போராட்டம் இலங்கையில் மட்டுமல்ல ஏனை நாடுகளிலும் முன்னெக்கப்பட்டு வருகின்றன. இதில் எல்லா இன மக்களும் பங்கேற்று ஈடுபட்டு வருகின்றனர். இதனை முன்னெடுக்க காரணமாக இருந்த அலிசாஹிர் மௌலாவுக்கு உலக வாழ் முஸ்லிம் மக்கள் சார்பில் நன்றியை கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என்றார்.

கிழக்கு மாகாண சுகாதார வைத்திய அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த விடயம் தொடர்பில் ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற கொரோனா தொற்றாளர்களின் எல்லா வகையான உடலியல் கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து கொரோனா தொற்று பரவுவதாக வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவினர் முன்வைத்த அறிக்கையின் பிரகாரம் அக்கரைப்பற்று நீதவான் நீதி மன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். அந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது பதவி நிலை அதிகாரிகளுக்கே அன்றி தனி நபர்கள் மீது கொண்ட கோபத்தினால் அல்ல என்பதை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் குறித்த வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி போன்ற இடத்தில் பதவி வழி அதிகாரிகளாக யார் இருந்தாலும் நாங்கள் அவர்களுக்குத்தான் வழக்குத் தாக்கல் செய்துள்ளோம். என்ற விடயத்தை அவர்களுக்கும் அது தொடர்பானவர்களுக்கும் மிகத் தெளிவாக கூறிக்கொள்கின்றேன். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :