கொவிட் 19 தொற்றுள்ள பிரதேச மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வரும் நோய் எதிர்ப்பு சக்தி மருந்துப் பொதிகள் நூறு சதவீதம் தூய மூலிகைகளால் பாரம்பரிய ஆயுர்வேத முறைப்படி விஷேடமாக தயாரிக்கப்பட்டு வழங்கி வருவதாக கிழக்கு மாகாண பாரம்பரிய வைத்தியர்களின் சம்மேளன பொதுச் செயலாளர் வைத்தியர் ஏ.சி.டில்ஷாத் தெரிவித்தார்.
இதன் பயன்பாடுகளை அறிந்த மக்கள் தற்போது என்னை நாடி வந்து இந்த மூலிகை மருந்துப் பொதிகளை பெற்றுச் செல்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும் பாரம்பரிய ஆயுர்வேத மூலிகை மருந்துப் பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (16) கல்முனையில் இடம்பெற்றபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் இதுதொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை மற்றும் மாளிகைக்காடு பிரதேசத்தில் கடந்த தினங்களாக கொவிட் 19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு வருகின்றர்.
கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கடற்கரைப்பள்ளி வீதி உள்ளிட்ட பகுதிகளில் 90 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகளின் படி 14 பேருக்கு கொவிட் 19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கல்முனை செய்லான் வீதி தொடக்கம் அம்மன் கோவில் வரையான பகுதிகள் புதன்கிழமை (16) இரவு 7.00 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், பாரம்பரிய முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத மூலிகைப் பொதிகளை விநியோகித்து வருகின்றோம்.
இதை அருந்துவதன் மூலம் எவ்வித பக்கவிளைவுகளும் மக்களுக்கு ஏற்படுவதில்லை என்றும் இந்த நோய் எதிர்ப்புப் பானத்தை அருந்தியவர்கள் பல நன்மைகளை அடைந்து வருகின்றார்கள். அது மாத்திரமல்லாமல் இந்த நோய் எதிர்ப்பு மூலிகைப் பானத்தை அருந்தியவர்கள் மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் விடுத்திருந்தனர். அதற்கமைவாகவும், கொவிட் 19 தொற்று இருக்கும் பிரதேசங்களுக்கும் இந்த மருந்துப் பொதிகளை வழங்கி வருகின்றோம் என்றும் கிழக்கு மாகாண பாரம்பரிய வைத்தியர்களின் சம்மேளன பொதுச் செயலாளர் வைத்தியர் ஏ.சி.டில்ஷாத் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment