புரவி போய்விட்டது: கொரோனா போகாது:சுற்றி வளைக்கிறது: எச்சரிக்கும் காரைதீவு தவிசாளர் ஜெயசிறில்.

காரைதீவு நிருபர் சகா-

பெ
ரும்புரளியைக் கிளப்பி பாடசாலைகளையெல்லாம் மூடவைத்த புரவி சூறாவளி கடந்துவிட்டது. ஆனால் கொடிய கொரோனா காரைதீவைச்சுற்றி வளைத்துள்ளது.அது போகாது. எனவே மக்களே மிகுந்த அவதானத்துடன் எச்சரிக்கையாயிருங்கள்.

என காரைதீவு பிரதேசசபைத்தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் தெரிவித்தார்.
காரைதீவின் மூன்று பக்கங்களிலும் கொரோனாத் தாக்கம் அதிகரித்துவருகின்ற சூழ்நிலையில் காரைதீவில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் எனக் கேட்டபோது அவர் மேற்கண்டவாறுபதிலளித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
எம்மை சூழவுள்ள சாய்ந்தமருதில் 7பேரும் நிந்தவுரில் சம்மாந்துறையில் ஒருவருமாக கொரோனாத்தொற்று அதிகரித்துவருகிறது. இந்நிலையில் மத்தியிலிருக்கக்கூடிய காரைதீவு பாதுகாப்பாக இருக்கவேண்டிய கட்டாயமுள்ளது.
எனவேபொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதோடு பிரதேசமட்ட தீர்மானங்களையும் கடைப்பிடிக்கவேண்டும்.

நாட்டில் மீண்டும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக காரைதீவுப் பிரதேசத்திலுள்ள சகல சிகை அலங்கார நிலையங்கள் பொதுச்சந்தை தற்காலிகமாக மறு அறிவித்தல் வரை மூடுமாறு கேட்டுள்ளோம்.

காரைதீவுப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பிரத்தியோக கல்வி நிலையங்கள் முன்பள்ளிகள்இ தனியார் கல்வி நிலையங்கள் மற்றும் மத்ரசாக்கள் என்பவற்றினை மறுஅறிவித்தல் வரை மூடுமாறும் கேட்டுள்ளோம
களியாட்ட நிகழ்ச்சிகள் விளையாட்டு போட்டிகள் கலாசார நிகழ்வுகள் மற்றும் மக்கள் ஒன்று கூடக்கூடிய வகையிலான நிகழ்வுகள் என்பவற்றிலிருந்து தவிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுள்ளோம்.

கொரோனா வைரஸ் தொற்றைத் தடுப்பதற்கு தங்களது பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளோம். என்றார்.





Attachments area

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :