பைசல் இஸ்மாயில் -
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை பிரதேசங்கள் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்ட பிரதேசங்களாக இருக்கின்றன. அந்தப் பிரதேசத்திலுள்ள மக்களுக்கு தொற்றுநோய் எதிர்ப்பை அதிகரிக்கக் கூடிய நோய் எதிர்ப்பு பானங்களை வீட்டுக்கு வீடு வழங்கும் செயற்திட்டத்தை கல்முனை பிராந்திய ஆயர்வேத இணைப்பாளர் வைத்தியர் எம்.ஏ.நபீல் தலைமையில் இன்று (11) முன்னெடுக்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பு நடவடிக்கையில், அட்டாளைச்சேனை தள ஆயர்வேத வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி எம்.பி.எம்.றஜீஸ், வைத்தியர்களான எஸ்.அப்துல் ஹை, எம்.ரீ.அமீறா, என்.எப்.ஹஸ்னா மற்றும் வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர்கள் ஈடுபட்டு நோய் எதிர்ப்பு பானங்களை வீட்டுக்கு வீடு சென்று வழங்கி வைத்தனர்.
இதேவேளை, கடற்தொழிலில் ஈடுபடுகின்ற மீனவர்களுக்கும் அவர்களின் மீன்பிடி வாடிகளுக்குச் சென்று வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment