அட்டாளைச்சேனைப் பிரதேசம் பாலமுனையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கத்தியால் குத்தி கொலை!

பாறுக் ஷிஹான்-

ட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார் .

இச்சம்பவம் அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலீஸ் பிரிவிற்குட்பட்ட பாலமுனை பகுதியில் நேற்றிரவு (09) இச்சம்பவம் இடம்பெற்றதுடன் 35 வயதான கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவம் தொடர்பில் 21 வயதான இளைஞர் ஒருவர் அக்கரைப்பற்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளர்.

நேற்றிரவு பாலமுனையில் அமைந்துள்ள தனது உறவினர் ஒருவரின் காணி எல்லைப்பிரச்சினை தொடர்பான சமாதானம் செய்ய சென்ற வேளை குறித்த நபரின் உறவினர் ஒருவரே கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது

இக்கொலை சம்பவத்தின் போது இடம்பெற்ற வாக்குவாதம் ஒன்றில் கத்தியால் கன்ஸ்டபிள் குத்தப்பட்டுள்ளார்.

இதே வேளை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் குறித்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்ட இருவரில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :