கினிகத்தேனை பிளக்வோட்டர் தோட்டம் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்புக்கு மத்தியில் முடக்கப்பட்டது


க.கிஷாந்தன்-

நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட கினிகத்தேன, பிளக்வோட்டர் தோட்டத்தில் மேலும் 19 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதி முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

தோட்டத்தில் இருந்து எவரும் வெளியேறுவதற்கும் அத்தோட்டத்தின் கீழ் மற்றும் மேல் பிரிவுகளுக்கு வெளியார் வருவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுவருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கும் சுகாதார அதிகாரிகள், மறுஅறிவித்தல் விடுக்கப்படும்வரை தனிமைப்படுத்தல் நடைமுறைகள் தொடரும் எனவும் கூறினர்.

எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் ஐவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மேலும் 600 பேரிடம் பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகளை பெறும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

ஹட்டன், அம்பகமுவ பொது சுகாதார காரியாலயத்துக்குட்பட்ட பகுதியில் நேற்று மாத்திரம் 25 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :