ஜனாதிபதி அவர்களே மண்ணால் படைக்கப்பட்ட எம்மை மரணித்த பின்னர் இந்த மண்ணில் அடக்குவதற்கு அனுமதி தர வேண்டும்


பாறுக் ஷிஹான்-

பௌத்த மக்களின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து இந்த அரசாங்கமானது ஏன் அரசியல் செய்கின்றது என ஜசாஸா எரிப்பிற்கு எதிராக மகனுடன் நடைபயணம் மேற்கொண்ட கல்முனை நபர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை(28) தனது நடைப்பயணம் இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து ஊடகவியலாளர்களுக்கு விளக்கமறிக்கும் போது மேற்கண்டவாறு கூறினார்.

சாகுல் ஹமீட் முஹம்மட் பௌஸ் (வயது-50) என்ற பெயரை உடைய நான் ஜனாஸா எரிப்புக்கு எதிராக எனது எட்டு வயது மகனுடன் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை கால்நடையாக அமைதி வழி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன்.ஆனால் கல்முனை நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் படி நிறுத்தப்பட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை கால்நடையாகச் சென்று தமது அமைதி வழி போராட்டத்தினை நடாத்தி முடிக்கப்பட்டது.

எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகளை நானும் மகனும் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றினை மகனால் கையளிக்கப்பட்டு நடைபாதை ஆரம்பமானது.

இருந்த போதிலும் நீதிமன்ற உத்தரவினால் தடைப்பட்டது.இந்த நாட்டில் பௌத்த மக்களின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து இந்த அரசாங்கமானது ஏன் அரசியல் செய்கின்றது என கேள்வி எழுப்பி வேண்டி உள்ளது.ஜனாதிபதி அவர்களே மண்ணால் படைக்கப்பட்ட எம்மை மரணித்த பின்னர் இந்த மண்ணில் அடக்குவதற்கு அனுமதி தர வேண்டும் என கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :