ஏ.எல்.எம்.ஷினாஸ்-
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கல்முனை நகரில் குறிப்பிட்ட சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக பிரகடனப்படுத்தி தொற் நோயை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மருதமுனை ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனம் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த கொரோனா தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான மாபெரும் விழிப்புணர்வு பேரணி இன்று (18) மாலை மருதமுனையில் நடைபெற்றது.
0 comments :
Post a Comment