புதிய ஆண்டுமுதல் வாழைச்சேனை கடதாசி ஆலை!



ஏறாவூர் நிருபர் - நாஸர்-
நாட்டின் கடதாசி தேவையின் முப்பது சதவீதத்தை வாழைச்சேனை கடதாசி ஆலையின் மூலம் வழங்கும் நோக்குடன் இந்த ஆலை புதிய ஆண்டுமுதல் இயங்கவுள்ளதாக தேசிய கடதாசி ஆலையின் தலைவர் விமல் ரூபசிங்க தெரிவித்தார்.

கட்டணம் செலுத்த முடியாது ஏற்பட்ட மின்விநியோகத்தடை காரணமாக மூடப்பட்டிருந்த வாழைச்சேனை காகிதஆலைää ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் 'சௌபாக்யா" தேசிய வேலைத்திட்டத்தின்கீழ் சூரிய சக்தி மின்சாரத்தைக்கொண்டு இயக்கப்படவுள்ளதாவும் அவர் கூறினார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையின் செயற்பாடுகள் குறித்து கண்டறிவதற்கென உயர்மட்ட அதிகாரிகள் குழு இன்று 28.12.2020 விசேட விஜயம் செய்தது.

இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜிதஹேரத் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலர் இவ்விஜயத்தில் இணைந்திருந்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலையின் பிரதம இணைப்பாளர் சுதத் லியனகே இயந்திரங்களின் இயக்கம் தொடர்பாக அதிகாரிகளுக்கு விளக்கமளித்தார்.

1975 ஆம் ஆண்டுகாலப்பபகுதில் சுமார் நான்காயிரம் ஊழியர்கள் பணிபுரிந்த வாழைச்சேனை கடதாசி ஆலை, கடந்த பலவருடகாலமாக மூடப்பட்டிருந்தது. எனினும் தற்போது 85 ஊழியர்களைகொண்டு மீள்இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாதகாலத்தில் ஊழியர்களின் எண்ணிக்கை 450 ஆக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த ஆலையில் ஒரு மாத்திற்கு அறுநூறு தொன் கடதாசியை உற்பத்தி முடியுமாக இருந்தபோதிலும் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் சர்வதேச சந்தைக்கு அனுப்பமுடியாமை போன்ற காரணங்களினால் உற்பத்தியை அதிகரிக்க முடியாதுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும் இலங்கை மின்சார சபை , பொறியியலாளர் திணைக்களம் மற்றும் கிழக்குப்பபல்கலைக்கழகம் ஆகிய உயர் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் ஆலை வெற்றிகரமாக இயக்கப்படும் என்றார்.


இலங்கை மின்சார சபையின் தலைவர் விஜிதஹேரத் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்-- இவ்வாலையிலுள்ள இயந்திரங்கள் தற்போது புனரமைக்கப்பட்டுள்ளன. உண்மையாகவே பழைய தொழிற்சாலையொன்றை மீளக்கட்டமைப்பதென்பது புதிய நிறுவனமொன்றை உருவாக்குவதைவிட சிரமமானது. எனினும் ஜனாதிபதியின் சௌபாக்யா திட்டத்தின்கீழ் பழைய தொழில் நிறுவனங்கள் புனரமைக்கப்படுகின்றன. இதன்மூலம் இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்பினை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இத்திட்டத்திற்கு பல நிறுவனங்கள் பங்களிப்பச் செய்யவுள்ளன என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :