புராதன சிறப்பு மிக்க பௌத்த வணக்கஸ்தலமாகிய தீகவாவி புனருத்தாபனம் செய்யப்பட்ட போது கண்டெடுக்கப்பட்ட புனிதமும் பவித்திரமுமான பொருட்கள் அடங்கிய தங்கப் பேழைக்கான விசேட பூசை ஆராதனை வழிபாட்டு நிகழ்வு இன்று (15) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.
அம்பாறை மாவட்ட செயலகமும் இந்து மாமன்றமும் இணைந்து இன்று செவ்வாய்க்கிழமை 15.12.2020 காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
அம்பாறை மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு பிரதமஅதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க கலந்துசிறப்பிப்பார். மாவட்டத்திள்ள இந்துக்கிராமங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
நிகழ்வுகளாக பூசைக்குரிய பொருட்கள் கொண்டு செல்லல் பிரார்த்தனை நிகழ்வு பௌத்த குருவுக்கு தானம் வழங்குதல் வசதி குறைந்த பௌத்த மதத்தை சார்ந்தவருக்கு உணவுப்பொதி வழங்குதல் பௌத்த அறநெறிப்பாடசாலைக்கு செல்லும் பௌத்த மாணவர்களுக்கு அப்பியாசகொப்பி வழங்குதல் என்பன இடம்பெறும் என மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர் கு.ஜெயராஜி தெரிவித்தார்.
கடந்த ஒருமாதகாலமாக இத்தங்கபேழை அம்பாறைக்கச்சேரியில் வைக்கப்பட்டு 3நேரப்பூஜை வழிபாடு இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment