வலிகாமம் கிழக்கு தவிசாளரின் முன்பிணை கோரிய மனு இன்று விசாரணைக்கு

யா
ழ்ப்பாணம் - வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் நிரோஷ் சட்டத்தரணிகளூடாக தாக்கல் செய்திருந்த முன் பிணை கோரும் மனு இன்று புதன்கிழமை 09.12.2020 மல்லாகம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

பிரதேச சபைக்கு சொந்தமான அச்செழு அம்மன் கோவில் வீதியில் பிரதேச சபையின் தீர்மானமின்றி சட்டத்திற்கு முரணாக அடிக்கல் நாட்டப்பட்டு காட்சிப் பதாகையும் அமைக்கப்பட்டிருந்தது. குறித்த காட்சிப் பதாகையினை தவிசாளர் அகற்றி இருந்தார். இதனால் மத்திய அரசாங்கத்துக்கும் உள்ளூராட்சி அதிகார அலகுக்கும் இடையில் பிணக்கு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் குறித்த விளம்பரப்பதாகை அகற்றப்பட்டமை தொடர்பில் தவிசாளர் நிரோஷ் பொது உடமைக்கு சேதம் விளைவித்தார் எனக் குற்றம்சாட்டி கடந்த திங்கட்கிழமை முதல் கைது செய்வதற்கு தீவிரமாக முயன்று வருகின்றார்கள்.

இதனையடுத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முன்பிணை கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இதனை மூத்த சட்டத்தரணிகளான எம்.ஏ. சுமந்திரன் ஆலோசனைகளுடன் சட்டத்தரணிகளான வி. திருக்குமரன் மற்றும் வி. மணிவண்ணன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் முன் பிணை கோரி மன்றில் சமர்ப்பணம் செய்திருந்தனர்.

மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இன்று அச்சுவேலி பொலிஸாரையும் மன்றில் ஆஜராகுமாறு தெரிவித்து மனு மீதான விசாரணையை ஒத்தி வைத்திருந்தது.

அம்மனு மீதான விசாரணை இன்று மல்லாகம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :