பலியான கைதிகளுக்கு நட்டஈடு வழங்க முடிவு





J.f.காமிலா பேகம்-
ஹர சிறைச்சாலையில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற கலவரத்தில் பலியான கைதிகளுக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு நட்டஈடு வழங்க அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
கம்பஹா – மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் பலியான கைதிகளின் எண்ணிக்கை 09ஆக அதிகரித்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் காயமடைந்த கைதிகளின் எண்ணிக்கையும் 113ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட கைதிகளில் மொத்தம் 38 பேருக்கு கொரோனா இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Thமஹர சிறையில் நடந்த கலவரத்தின் பின்னணி பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
தனிமைப்படுத்தல் குறைபாடுகளை சுட்டிக்காட்டி 2000 கைதிகள் வரை ஒரே நேரம் சிறை வைத்தியசாலையை முற்றுகை செய்து அங்குள்ள வைத்திய அதிகாரிகளை தாக்கியுள்ளனர்.
பின் அங்கு உள்ள சித்த சுயாதீனமற்றவர்களுக்கு வழங்கும் திரவத்தை அருந்தியுள்ளனர்.
இத்திரவம் குடிப்பதால் போதையில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது.
பின் வைத்தியசாலையை சேதப்படுத்தி தீ வைத்து கைதிகள், தங்களை கட்டுப்படுத்த வரும் அதிகாரிகள் மீதும் தாக்குதல் நடத்தினர் என்று தெரியவருகிறது.
தாக்குதலில் வைத்தியசாலை அதிகாரிகள் இருவரின் நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :