ஜிபி ரோடு மற்றும் தாயர் சாகிப் தெரு சந்திப்பில்
63 வது வட்ட எஸ்டிபிஐ கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி தலைவர் சலீம் ஜாபர் தலைமை தாங்கினார். தொகுதி நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் திரண்டு,
சென்னை குடிநீர் வாரியத்தின் பெயரை மாற்றி "செயல்படாத (சென்னை) குடிநீர் வாரியம்" என அறிவிக்கக்கோரி கோஷமிட்டனர்.
இதனை தொடர்ந்து அங்கு வந்த உதவி பொறியாளர் பாண்டியன், இன்னும் 10 நாட்களில் குடிநீர் மற்றும் கழிவுநீர் பிரச்சனையை சரிசெய்து தறுவதாக வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
0 comments :
Post a Comment