J.f.காமிலா பேகம்-
கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் உடல்களை மாலைதீவு புதைக்க முடியும் என்றால், ஏன் இலங்கையில் முடியாது என்ற கேள்வியை நீதியமைச்சர் அலிசப்ரி கேட்டுள்ளார்.
கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாக தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டிருப்பதாகவும் நீதியமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சமூக வலயத்தள நேரலை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இப்படியான நிலைமையில், கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால், பாரிய பிரச்சினைகளே உருவெடுக்கும். அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்தவும் வைத்துவிடலாம் என்றும் அமைச்சர் எச்சரித்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment