தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு ஓட்டமாவடிக்கு விஜயம்; நுளம்புகளைப் பிடித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்!

எச்.எம்.எம்.பர்ஸான்-

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் அதிகரித்துள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்த கொழும்பிலிருந்து தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் இன்று (6) ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

குறித்த வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் நாளாந்தம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

குறித்த பகுதியில் பெருகியுள்ள டெங்கு நோயை கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், பிரதேச சபை, பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் ஆகியவை இணைந்து பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

அதன்தொடரில் கொழும்பு தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவினர் குறித்த பகுதிக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு நுளம்புகளைப் பிடித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ் விஜயத்தில் கொழும்பு சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்கள், மட்டக்களப்பு மாவட்ட தொற்றுநோய் மருத்துவ அதிகாரி டொக்டர் திருமதி தர்சினி, ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.தாரிக், மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நெளபர், பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஏ.கே. ஜெளபர் மற்றும் தெ தேர்டீன் இளைஞர் கழக உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :