திருகோணமலையில் திடீரென மயங்கி விழுந்த பொலிஸ் உத்தியோகத்தர் மரணம்


எப்.முபாரக்-

தி
ருகோணமலை நிலாவெளி பொலிஸ் நிலைய போக்குவரத்து உதவிப் பொலிஸ் பரிசோதகர் பணியின் போது திடீரென மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.

திருமலை நாச்சிக்குடாவைச் சேர்ந்த சுமண பண்டார (54 வயது) என்பவரே மேற்படி மரணமடைந்தவராவார்.

இன்று(20) ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.45 மணியளவில் தனது பணியின் போது நெஞ்சு வலி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.

இதனையடுத்து அவரை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேதம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது மனைவி தாதி உத்தியோகத்தராக கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :