கொவிட் தொற்றுக்கான உள்நாட்டு மருந்து என கூறி இணையத்தளங்களில் பகிரப்படும் மருந்து வகைகளை பயன்படுத்த வேண்டாம் என உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு கிராமி மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, சமூக சுகாதார இராஜாங்க அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகரவின் கையெழுத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயுர்வேதம் மற்றும் உள்நாட்டு மருத்துவம் ஆகியவற்றின் ஊடாக மருந்தொன்றை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் குறித்து அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவ்வாறு பயன்படுத்தப்படும் மூலிகைகளின் எந்த பாகத்தை பயன்படுத்த வேண்டும் என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் கை மருந்தை தவிர வேறு எந்தவொரு மூலிகை மருந்தையும் அருந்த வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
உள்நாட்டு மருந்து வகைகள் தொடர்பிலும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த ஆய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் அது தொடர்பில் மக்களுக்கு தெளிவூட்டல்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment