கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பத்தனை, ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அறைக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் இன்று (14.12.2020) திங்கட்கிழமை இடம்பெற்றது. இதற்கென தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் கீழ் 6 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நாட்டில் அந்நிய செலவாணியை ஈட்டிதரும் உன்னதமான உழைப்பாளிகளாக பெருந்தோட்ட தொழிலாளர்கள் மதிக்கப்படிடுகின்றார்கள். கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் நலன்புரி சேவைகளை துாட்ட நிர்வாகங்கள் முன்னெடுக்க வேண்டும் என ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது தோட்ட நிர்வாகங்கள் தோட்ட தொழிலாளர்களின் நலன்புரி சேவைகளில் அக்கறை காட்டுவதில்லை என்பது வெளிப்படையாக தெரிகின்றது.
இந்த நிலலையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெருந்தோட்ட மக்களின் பாதுகாப்பு அமைப்பு என்ற வகையில் அமைச்சின் நிதி ஊடாக தொழிலாளர்கள் நலன் பேணும் வகையில் முதல் நடவடிக்கையாக இந்த தொழிலாளர் ஓய்வு அறை தோட்டப்பகுதியில் அமைக்கும் நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்ச்சியாக தோட்ட பகுதிகளில் அமைக்கப்படும் என்பது குறிப்பிடதக்கது.
கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சபை உப தலைவர், உறுப்பினர்கள், தோட்ட அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.
0 comments :
Post a Comment